உன் உடையில் உள்ள சுத்தத்தை மனதுள்ளும் காட்டு. இன்றைய 5 தமிழ்ப் பொன்மொழிகள் 06- 06 - 2023
#today
#Lanka4
#இன்று
#லங்கா4
#ponmoli
#பொன்மொழிகள்
Mugunthan Mugunthan
2 years ago
உன் உடையில் உள்ள
சுத்தத்தை
மனதுள்ளும் காட்டு.
எத் தடை வந்தாலும்
பத்தடி தள்ளிப்போகும்.

உண்மை பேசுகிறவர்கள்
மாத்திரம்
நல்லவர்கள் அல்ல.
சமயத்தில்
பிரிவுகளை தடுக்க
பொய் பேசுகின்றவர்கள்
மிக மிக நல்லவர்கள்.

ஆடும் உலகில்
அடங்கப்போவது 2022.
கூடும் உலகு
குவியப்போவது 2023க்குள்.
நாம் எங்கே நிற்கிறோம்?
நிதானம்..... நிதானம்.....
ஆம் நிதானமே ஆயுதம்.
நிதானமாய் உனக்குள் யோசி.
பதில் உன்னிடமே உள்ளது.

தோள் கொடுப்பவன்
மட்டும் நண்பன் அல்ல.
கொடுத்த தோளை
மாசு செய்யாமலும்
இருத்தல் வேண்டும்

இளமையில் உழை
முதுமையில் அதுதான்
உன்னைக் காக்கும் ஊன்றுதடி.
ஆம்...
நீ சேர்ப்பது பணம் மட்டுமல்ல,
புண்ணியமும்தான்.
அடுத்தவருக்கு நீ செய்யும் புண்ணியமே
உன் ஆயுள்வரை உன்னை காக்கும்.
