நிலைதடுமாறி கீழே விழுந்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன்!

#America #President
Mayoorikka
3 years ago
நிலைதடுமாறி கீழே விழுந்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன்!

கொலராடோ கடற்படை தளத்தில் நடைபெற்ற கடற்படை பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற அமெரிக்க அதிபர் ஜோ பைடன், நிலை தடுமாறி மேடையில் விழுந்தார்.

 அமெரிக்கா கொலராடோவில் உள்ள அமெரிக்க விமானப்படை அகாடமியின் பட்டமளிப்பு விழாவில் சான்றிதழ்களை வழங்கும் நிகழ்ச்சியில் ஜனாதிபதி ஜோ பைடன் கலந்து கொண்டார்.

 இதன்போது, விழா மேடையின் அருகே தடுமாறி   ஜோ பைடன் கீழே விழுந்தார். பின்னர் துரிதமாக செயல்பட்ட விமானப்படை அதிகாரிகள் அவருக்கு உதவினர்.

 பின்னர், அதிகாரிகளின் உதவி ஏதுமின்றி, அவர் நடந்து சென்று தமது இருக்கையில் அமர்ந்தார்.

 விழாவின் போது சுமார் ஒன்றரை மணித்தியாலம் ஜனாதிபதி ஜோ பைடன் நின்ற நிலையில் 921 பேர்களுக்கு பட்டமளித்துள்ளதுடன் அவர்களுடன் கைகுலுக்கி பாராட்டு தெரிவித்தார்.

 இந்த சூழலில் வெள்ளை மாளிகை வெளியிட்ட தகவலில், அதிபர் ஜோ பைடன் நலமாக இருக்கிறார், பாதிப்பு ஏதுமில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 விழா நடந்த மேடையில் மணல் மூட்டைகள் இருந்த நிலையில் அதிபர் ஜோ பைடன் அந்த மணல் மூட்டை ஒன்றில் மிதித்து கால் தடுமாறி கீழே விழுந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 80 வயதான ஜோ பைடன் அமெரிக்க அதிபராக பதவி வகிக்கும் மிக வயதான நபர் என்பது குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4