ஓடும் பேருந்தில் பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட நபர்; அடித்து உதைத்து போலீசில் ஒப்படைத்தனர்

#Women #Sexual Abuse #Harassment #harassed
Mani
3 years ago
ஓடும் பேருந்தில் பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட நபர்; அடித்து உதைத்து போலீசில் ஒப்படைத்தனர்

திருப்பூரில், ஓடும் பேருந்தில் பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட நபரை சக பயணிகள், அடித்து உதைத்து போலீசில் ஒப்படைத்தனர்.

பொள்ளாச்சியில் இருந்து திருப்பூருக்கு சென்ற அரசு பேருந்தில், பெண் ஒருவர் தனது 8 வயது குழந்தையுடன் பயணித்துள்ளார்.

அவரது பின் இருக்கையில் அமர்ந்திருந்த நபர், பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அந்த பெண் எச்சரித்தும் அந்நபர் மீண்டும் சில்மிஷத்தில் ஈடுபட்டதால் ஆத்திரமடைந்த பெண், நடத்துநரிடம் புகார் தெரிவித்து சத்தமிடத் தொடங்கினார். உடனே பேருந்திலிருந்த மற்ற பயணிகள் அந்நபரை தாக்கினர்.

திருப்பூர் பேருந்து நிலையத்தை சென்றடைந்ததும், நடத்துநர் அந்த நபரை காவல்நிலையத்தில் ஒப்படைத்தார். பெண் அளித்த தகவலின் பேரில், அந்த நபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4