அரசியலிலும் தோனி தனது இன்னிங்ஸை தொடங்க வேண்டுமென ஆனந்த் மகேந்திரா ட்வீட்

#Twitter #sports #Tamilnews
Mani
2 years ago
அரசியலிலும் தோனி தனது இன்னிங்ஸை தொடங்க வேண்டுமென ஆனந்த் மகேந்திரா ட்வீட்

ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி சாம்பியன் பட்டம் வென்றதை தொடர்ந்து அணியின் கேப்டன் தோனி ரசிகர்களின் அன்புக்காக, தான் இன்னும் ஒரு சீசன் விளையாட விரும்புவதாக தெரிவித்திருந்தார். தோனியின் அறிவிப்பையடுத்து, சென்னை ரசிகர்கள் கடும் உற்சாகம் அடைந்துள்ளனர்.

அந்த வகையில் தொழிலதிபர் ஆனந்த் மகிந்திரா பரபரப்பான ட்வீட்டை போட்டுள்ளார். அதில் தோனியின் முடிவு தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும், தோனி அரசியலில் களம் காண வேண்டுமென தான் விரும்புவதாகவும் கூறியுள்ளார்.

பாரதிய ஜனதாவின், தேசிய துணைத் தலைவர் பைஜயெந்த் ஜெய் பாண்டாவின் தலைமையிலான என்சிசி ஆய்வுக் குழுவில் தோனியுடன் தான் பணியாற்றியியுள்ளதாகவும் ஆனந்த் மகிந்திரா தெரிவித்துள்ளார்.

அவருடன் பணியாற்றிய போது, தோனியின் ஆளுமையை தான் அறிந்து கொண்டதாகவும் ஆனந்த் மஹிந்த்ரா குறிப்பிட்டுள்ளார். அரசியலிலும் தோனி தனது இன்னிங்சை தொடங்க வேண்டுமென்றும் ஆனந்த் மகிந்த்ரா தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!