பிரதமர் தாய்லாந்துக்கு விஜயம்
#SriLanka
#Dinesh Gunawardena
#Lanka4
#Thailand
#sri lanka tamil news
Prathees
2 years ago
தாய்லாந்துக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு பிரதமர் தினேஷ் குணவர்தன இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுச் சென்றார்.
பிரதமருடன் 11 பேர் கொண்ட குழுவொன்று தாய்லாந்துக்கு சென்றுள்ளதாக கட்டுநாயக்க விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவர்கள் இன்று அதிகாலை 01.10 மணியளவில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானமான UL 402 இல் தாய்லாந்தின் பாங்காக் நோக்கிச் சென்றுள்ளனர்.
இதேவேளை, தாய்லாந்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட "சக் சுரின்" என்ற யானை இன்னும் சில நாட்களில் விசேட சரக்கு விமானம் மூலம் நாட்டுக்கு கொண்டு செல்லப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.