தம்புள்ளை - ஹபரண வீதியில் லொறி மற்றும் ஆம்புலன்ஸ் மோதி கோர விபத்து : பலர் வைத்தியசாலையில்!

#SriLanka #Accident
Thamilini
2 hours ago
தம்புள்ளை - ஹபரண வீதியில் லொறி மற்றும் ஆம்புலன்ஸ் மோதி கோர விபத்து :  பலர் வைத்தியசாலையில்!

தம்புள்ளை-ஹபரண பிரதான வீதியில் லொறி மற்றும் ஆம்புலன்ஸ் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. 

இன்று பிற்பகல் இடம்பெற்ற இந்த சம்பவத்தில், லொறியின் சாரதி மற்றும் உதவியாளர் படுகாயமடைந்து சிகிச்சைக்காக தம்புள்ளை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதே நேரத்தில் ஆம்புலன்ஸ் சாரதி மற்றும் பெண் ஊழியர் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும், அவர்களும் தம்புள்ளை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

 லொறி சாரதியின் கவனக்குறைவான ஓட்டுதலே இந்த விபத்துக்குக் காரணம் எனத் தெரிவித்துள்ள பொலிஸார்  மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அறிவித்துள்ளனர். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!