சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட மாற்றம்!
#SriLanka
#prices
#Oil
Mayoorikka
2 years ago
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளது. அமெரிக்காவின் கடன் எல்லை குறித்த சர்ச்சை தீர்ந்தமை இதற்கு பிரதான காரணம் என தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, பிரண்ட் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 75.71 டொலராகவும், வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் பீப்பாய் ஒன்றின் விலை 71.48 டொலராகவும் குறைந்துள்ளது.
இதற்கமைய, கச்சா எண்ணெய் விலை சுமார் 2% குறைந்துள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.