ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது; ஷனகா தலைமையிலான இலங்கை அணி அறிவிப்பு

#Srilanka Cricket #sports #Tamilnews #Sports News
Mani
2 years ago
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது; ஷனகா தலைமையிலான இலங்கை அணி அறிவிப்பு

உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நேற்றுடன் நிறைவடைந்தது. தொடரில் குஜராத்தை வீழ்த்தி சென்னை அணி ஐந்தாவது பட்டத்தை வென்றது.

இந்நிலையில், ஐபிஎல் தொடரில் பங்கேற்ற வெளிநாட்டு வீரர்கள் அவர்களது சொந்த நாடுகளுக்கு திரும்பி சர்வதேச அணிக்காக ஆட உள்ளனர். ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி ஜூன் 2ம் தேதி முதல் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆட உள்ளது.

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் வீரர்களை இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. தசுன் ஷனக்கவின் அணியில் மலிங்காவைப் போன்று பந்துவீச்சு பாணியைக் கொண்ட மதீஷ பத்திரன மற்றும் மகேஷ் திக்சன ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!