மத நல்லிணக்கத்தை சீர்குலைப்பவர்களை கண்டறிய விசேட பொலிஸ் பிரிவு

#SriLanka #Sri Lanka President #Police #Ranil wickremesinghe #Lanka4 #sri lanka tamil news
Prathees
2 years ago
மத நல்லிணக்கத்தை சீர்குலைப்பவர்களை கண்டறிய விசேட பொலிஸ் பிரிவு

மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் குழுக்களை விசாரித்து நடவடிக்கை எடுப்பதற்காக விசேட பொலிஸ் பிரிவை நிறுவ ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார்.

 நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இவ்வாறான குழுக்கள் உருவாகி வருவதாகவும், அவர்களின் செயற்பாடுகள் அரசாங்கத்தை சங்கடப்படுத்துவதற்காகவே திட்டமிடப்பட்டவை எனவும் ஜனாதிபதிக்கு கிடைத்த புலனாய்வுத் தகவலின் பிரகாரம் இந்த விரைவான முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

 இது தொடர்பில் உரிய புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலையடுத்து, இது தொடர்பில் பொலிஸ் மா அதிபருடன் கலந்துரையாடி தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஜனாதிபதி அலுவலக பிரதானி, தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்க இன்று (29) பணிப்புரை விடுத்துள்ளார்.

 வரலாறு காணாத பாரிய பொருளாதார ஸ்திரமின்மைக்கு நாடு முகம் கொடுத்த போது மத நல்லிணக்கத்தை சீர்குலைத்து மக்களிடையே பிளவை ஏற்படுத்தி நிலைமையை ஸ்திரப்படுத்தி முன்னோக்கி செல்வது கடினமாக இருந்ததாக ஜனாதிபதிக்கு கிடைத்த புலனாய்வு தகவல் மூலம் தெரியவந்துள்ளது. 

இதுபோன்ற நாசகார செயல்களை கண்காணித்து, மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் விஷயங்கள் சமூகத்தை சென்றடையும் முன்பே தடுக்கும் பொறுப்பு புதிதாக நிறுவப்பட்டுள்ள புதிய பொலிஸ் பிரிவு ஆகும்.

 ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைவாக புதிய பொலிஸ் பிரிவு மிக விரைவில் ஸ்தாபிக்கப்படும் என தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!