பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் எதிர்வரும் வாரத்தில் நியமிக்கப்படுவார்
#SriLanka
#Lanka4
#Power station
#power cuts
#Hydropower
Kanimoli
2 years ago
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் எதிர்வரும் வாரத்தில் நியமிக்கப்படுவார் என ஆணைக்குழுவின் உறுப்பினர் டக்ளஸ் நாணயக்கார தெரிவித்திருந்தார். இரண்டு உறுப்பினர்களின் வெற்றிடங்கள் உள்ளதால், அந்த வெற்றிடங்கள் நிரப்பப்பட்டதன் பின்னர் உறுப்பினர்களில் ஒருவர் தலைவராக நியமிக்கப்படுவார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இம்மாதம் 30ஆம் திகதிக்குள் பூர்த்தி செய்யப்பட வேண்டிய ஆவணங்கள் உள்ளதால் இம்மாதத்திற்குள் இந்த நியமனங்கள் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் நிதிக்கு பொறுப்பான அமைச்சரால் நியமிக்கப்படுகிறார்.