கப் ரக வாகனம் மோதி விபத்து சம்பவிதத்தில் ஒருவர் பலி

#SriLanka #Jaffna #Death #Accident #Hospital #Lanka4
Kanimoli
2 years ago
கப் ரக வாகனம் மோதி விபத்து சம்பவிதத்தில் ஒருவர் பலி

வீட்டுக்கு முன்னால் உள்ள வீதியில் புல் செருக்கிக் கொண்டு இருந்தவேளை வீதியால் வந்த கப் ரக வாகனம் மோதி விபத்து சம்பவித்ததில் அவர் உயிரிழந்துள்ளார். இதன்போது இன்னொருவர் மீதும் குறித்த வாகனம் மோதி அவர் படுகாயமடைந்த நிலையில் அச்சுவேலி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

 விபத்தினை ஏற்படுத்தியவர் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார். இதனையடுத்து அச்சுவேலி பொலிஸார் அவரை கைது செய்துள்ளனர். பண்ணாகம் பகுதியைச் சேர்ந்த சாரதியே இவ்வாறு விபத்தினை ஏற்படுத்திவிட்டு பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார். இந்த விபத்தில் போது அதே பகுதியைச் சேர்ந்த சீனியர் சந்திரகாந்தன் என்பவரே உயிரிழந்துள்ளார். 

உயிரிழந்தவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. சடலத்தின் மீதான பிரேத பரிசோதனைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை அச்சுவேலி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!