உடல்நல குறைவால் போப் பிரான்சிஸின் நிகழ்ச்சிகள் ரத்து
#Meeting
#Hospital
#Pop Francis
Prasu
2 years ago
போப் ஆண்டவர் பிரான்சிஸ் (வயது 86) இந்த வாரம் முழுவதும் நெருக்கமான பணி அலுவல்களை கொண்டிருந்தார். குறிப்பாக நேற்று முன்தினம் இத்தாலி நாட்டு ஆயர்கள் மாநாடு, பள்ளி அறக்கட்டளை சந்திப்பு மற்றும் பல்வேறு உயர்மட்ட குழுவினருடன் ஆலோசனை என பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றார்.
அவருக்கு நேற்று திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. இதனால் அவர் ஓய்விலேயே இருந்தார். எனவே வழக்கமான நிகழ்ச்சிகளை அவர் ரத்து செய்து விட்டார். இதில் முக்கியமாக, வழக்கமான மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் அவர் பங்கேற்கவில்லை.
அவரது உடல் நலம் குறித்து மேலதிக தகவல் எதுவும் வெளியாகவில்லை.