புல்லுப் புடுங்கி கொண்டு இருந்தவர் மீது மோதிய வாகனம்: சம்பவ இடத்திலேயே உயிரிழந்த குடும்பஸ்தர்

#SriLanka #Jaffna #Death #Accident
Mayoorikka
2 years ago
புல்லுப் புடுங்கி கொண்டு இருந்தவர் மீது மோதிய வாகனம்: சம்பவ இடத்திலேயே உயிரிழந்த குடும்பஸ்தர்

அச்சுவேலி வல்லை பருத்தித்துறை பிரதான வீதியில், வீதியோரம் புல்லுப் புடுங்கி கொண்டு இருந்தவர் மீது வாகனம் மோதியதில் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

 இன்று(27) காலை வீட்டுக்கு முன்னாள் புல்லுப் புடுங்கி கொண்டு இருந்தவர் மீது வேக கட்டுப்பாட்டை இழந்த கப் ரக வாகனம் மோதி விபத்துக்குள்ளாக்கியது. சம்பவத்தில் சீனியர் சந்திரகாந்தன் என்ற 56 வயதான நபர் உயிரிழந்தார்.

 வேக கட்டுப்பாட்டை இழந்து வாகனம் விபத்துக்குள்ளாகியதுடன் அங்கிருந்த இரண்டு மின்கம்பங்களையும் மோதி சேதப்படுத்தியது. 

 விபத்தின் போது அருகில் இருந்த ஒருவரும் காயமடைந்தார். உயிரிழந்தவரின் சடலம் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. விபத்துடன் தொடர்புடைய வாகனத்தின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

 கோழிக்குஞ்சுகளை ஏற்றிச் சென்ற வாகனமே இவ்வாறு வேக கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியதுடன் வாகனத்தை செலுத்தியவர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் தாதி உத்தியோகத்தர் எனவும் பொலிசார் தெரிவித்தனர்

images/content-image/1685204698.jpg

images/content-image/1685204680.jpg

images/content-image/1685204666.jpg

images/content-image/1685204647.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!