இலங்கை மற்றும் பாகிஸ்தானுக்கு அனுப்ப தயாராக இருந்த 12,000 கோடி மதிப்பிலான ஐஸ் போதைப்பொருள் கேரளாவில் பறிமுதல்!

#India #Arrest #drugs #Lanka4 #Heroin #sri lanka tamil news #Kerala
Prathees
2 years ago
இலங்கை மற்றும் பாகிஸ்தானுக்கு அனுப்ப தயாராக இருந்த 12,000 கோடி மதிப்பிலான ஐஸ் போதைப்பொருள் கேரளாவில் பறிமுதல்!

இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கு சட்டவிரோதமாக கொண்டு செல்ல தயாரிக்கப்பட்ட சுமார் 12,000 கோடி ரூபா பெறுமதியான 2,600 கிலோ ஐஸ் போதைப்பொருளுடன் இரண்டு சந்தேகநபர்கள் இந்தியாவில் கேரள பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 சந்தேகநபர்களில் ஒருவர் இந்தியாவில் வசிக்கும் இலங்கை வம்சாவளியைச் சேர்ந்தவர், மற்றையவர் பாகிஸ்தானியர். 

 கேரள மாநிலத்தில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கடற்கரையை அண்மித்த வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது இந்த ஐஸ் போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

 சந்தேகநபர்கள் இருவரையும், ஐஸ் போதைப் பொருட்களையும் கேரளா நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கு கேரள பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!