உயிரிழந்த யானையின் தந்தங்களை வெட்டிய சந்தேக நபர்களை கண்டுபிடிக்க விசாரணை

#SriLanka #Murder #Investigation #Elephant #Lanka4 #sri lanka tamil news
Prathees
2 years ago
உயிரிழந்த யானையின் தந்தங்களை வெட்டிய சந்தேக நபர்களை கண்டுபிடிக்க விசாரணை

ரித்திகல வனவிலங்கு தளத்திற்குட்பட்ட பலுகஸ்வெவ கொகட்டியகொல்ல பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த யானையின் ஜோடி தந்தங்களை திருடிய சந்தேக நபர்களை கண்டுபிடிப்பதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

 குறித்த யானை நேற்று உயிரிழந்துள்ளதுடன் இதனை கண்ட பிரதேசவாசிகள் இது தொடர்பில் ரித்திகல வனஜீவராசிகள் அலுவலகத்திற்கு அறிவித்துள்ளனர்.

 வனவிலங்கு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது யானையின் தந்தங்கள் வெட்டப்பட்டிருப்பதை கண்டனர். 

சம்பவம் தொடர்பில் ரித்திகல வனவிலங்கு பாதுகாப்பு அலுவலகம் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளது.

 கவுடுல்ல, மின்னேரியா தேசிய பூங்காக்கள் மற்றும் ரித்திகல பிரதேசத்தில் சுற்றித்திரிந்த கொலிதா என்ற யானை இவ்வாறு உயிரிழந்திருக்கலாம் எனவும், சுமார் 02 அடி நீளம் கொண்ட யானையின் நன்கு வளர்ந்த ஜோடி தந்தங்கள் எடுக்கப்பட்டிருக்கலாம் எனவும் வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். .

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!