மோக்கா புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 145 ஆக உயர்வு!

#Death #world_news #Breakingnews #Myanmar
Mani
3 years ago
மோக்கா புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 145 ஆக உயர்வு!

நெய்பியிடாவ் 

வங்கக் கடலில் உருவான மோக்கா புயல் வங்காளதேசம்-மியான்மர் இடையே கரையை கடந்தது. அப்போது மணிக்கு 200 கி.மீ. வேகத்தில் பலத்த புயல் காற்று வீசியது.

இந்த அதிதீவிர புயல் வங்காளதேச-மியான்மர் எல்லையில் உள்ள கடலோர பகுதிகளை பந்தாடியது. புயல் கரையைக் கடந்தபோது வங்காளதேசம், மியான்மரின் கடலோர பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வங்காளதேசத்தின் காக்ஸ் பஜார் மற்றும் சட்டோகிராம் நகரங்களில் இருந்து சுமார் 5 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.

இதேபோல், மியான்மரின் கியெவுக்பியு நகர் உள்பட பல கடலோர பகுதிகள் புயலால் கடும் பாதிப்பை சந்தித்தன. அங்கும் புயல், மழை, வெள்ளம் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.

இந்நிலையில், மியான்மரில் மோக்கா புயலால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 145 ஆக உயர்ந்துள்ளது. இதில் ராணுவ வீரர்கள் 4 பேர், உள்ளூர்காரர்கள் 24 பேர், வங்காள தேசத்தைச் சேர்ந்த 117 பேர் பலியாகியுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4