நீர்கொழும்பு சிறைக் கலவரம் - பின்னணி வெளியானது!

#SriLanka #Prison #Negombo #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
1 hour ago
நீர்கொழும்பு சிறைக் கலவரம் - பின்னணி வெளியானது!

நீர்கொழும்பு சிறையில் இரு கைதிகள் குழுக்களுக்கு இடையே வெடித்த மோதலானது, 'பூரு மூனா' என்றழைக்கப்படும் ஒரு பாதாள உலகக் கும்பல் உறுப்பினருடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்ட சுரேஷ் என்ற போதைப்பொருள் கடத்தல்காரரால் திட்டமிடப்பட்டது என்று காவல்துறையினர் கூறுகின்றனர்.

ஒரு போதைப்பொருள் பேரத்தின் காரணமாக இந்த மோதல் நடந்ததாகக் கூறப்படுகிறது.

இதில் இரண்டு கைதிகள் உயிரிழந்துள்ளதாகவும், 28 கைதிகள் தற்போது மருத்துவமனையில் உள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

அத்துடன் கவலைக்கிடமான நிலையில் இருந்த இரு கைதிகள் கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இருப்பினும், மோதலைத் தொடர்ந்து, நீர்கொழும்பு மற்றும் சுற்றியுள்ள காவல் நிலையங்களின் அதிகாரிகளும், காவல்துறை சிறப்பு அதிரடிப்படையினரும் சிறை வளாகத்திற்கு வரவழைக்கப்பட்டனர்.

நீர்கொழும்பு சிறைச்சாலை என்பது குறுகிய கால கைதிகள் மற்றும் விசாரணைக் கைதிகள் இருவரும் தடுத்து வைக்கப்படும் இடமாகும். அங்கு சுமார் 1800 கைதிகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4