பெண் வேடமிட்டு சிறுமியை கடத்தி துஷ்பிரயோகம் செய்த ஸ்காட்லாந்து நபர்

#Arrest #Sexual Abuse #Scotland
Prasu
2 years ago
பெண் வேடமிட்டு சிறுமியை கடத்தி துஷ்பிரயோகம் செய்த ஸ்காட்லாந்து நபர்

ஸ்கொட்லாந்தில், பெண் போன்று உடையணிந்து பாடசாலை மாணவியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த நபர் ஒருவர் விசாரணையில் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.

ஸ்காட்லாந்து எல்லையில் உள்ள தனது வீட்டில் ஆரம்பப் பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்வதற்கு முன்பு பெண் போல் உடையணிந்து கடத்தியதை அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

எமி ஜார்ஜ் என அழைக்கப்படும் 53 வயதான நபர், கடந்த பெப்ரவரியில், சிறுமி ஒருவருக்கு லிப்ட் கொடுத்து தனது சொந்த வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அடுத்த 27 மணி நேரத்தில் அவர் அவளை தொடர்ச்சியான பாலியல் வன்கொடுமைகளுக்கு உட்படுத்தியுள்ளார்.

அவர் நித்திரையடைந்தவுடன், அங்கிருந்த தப்பித்த சிறுமி, 999 என்ற அவசர இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்தி பொலிஸாரின் உதவியை பெற்றார். 

பின்னர் எமி ஜார்ஜ் கைது செய்யப்பட்ட நிலையில், விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டது. இதன்போதே அவர் மேற்படி தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!