ஆப்பிரிக்காவில் தங்க சுரங்கம் இடிந்து விழுந்து 7 பேர் பரிதாபமாக பலி!

#Death #Accident #world_news #Earthquake #Tamilnews #Breakingnews #ImportantNews
Mani
2 years ago
ஆப்பிரிக்காவில் தங்க சுரங்கம் இடிந்து விழுந்து 7 பேர் பரிதாபமாக பலி!

மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள கானா, சட்டப்பூர்வ அனுமதியுடன் செயல்படும் ஏராளமான தங்கச் சுரங்கங்களைக் கொண்டுள்ளது. அதேவேளையில் உள்ளூர் மக்கள் சிலர் சட்டவிரோதமாக சுரங்கங்களை அமைத்து தங்கத்தை வெட்டி எடுக்கிறார்கள். இதுபோன்ற சட்டவிரோத தங்க சுரங்கங்களில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு தொடர்ந்து நடந்து வருகிறது.

இந்தச் சூழ்நிலையில், கானாவின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு சுரங்கத்தில் இருந்து தங்கம் எடுக்கும் பணியில் பல தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக அந்த பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவால் தங்கசுரங்கம் இடிந்து விழுந்தது, அங்கு பணிபுரிந்த தொழிலாளர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர்.

இந்த விபத்தில் சுரங்க தொழிலாளர்கள் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர், மேலும், இதல் படுகாயமடைந்த 3 பேரை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!