முள்ளிவாய்க்காலில் எனக்கு நடந்த உண்மை சம்பவம் இன்னும் மறக்க முடியவில்லை

#SriLanka #Article #Mullaitivu #Lanka4 #Mullivaikkal
Kanimoli
11 months ago
முள்ளிவாய்க்காலில் எனக்கு நடந்த உண்மை சம்பவம் இன்னும் மறக்க முடியவில்லை

may 18 இண்டைக்கு எனக்கு இதுக்கு கூட வழி இல்லை ,சாப்பிடத்தாகூட ஞாபகம் இல்ல .நிறைய பசிச்சது ,ஆனா பக்கத்தில அப்பா இல்ல அப்பா ,அம்மாக்கு எங்களக்கூட ஞாபகம் இல்ல , சொந்தக்காரன் கூட பக்கத்தில நிக்கேல்ல ,அவனவனுக்கு அவன் அவன் உயிரு பெருசுதானே. . பக்கத்தில நிக்கிறவன் எல்லாம் உயிர் இல்லாம போறான் ஆனா இண்டைக்கு அழ ஒருத்தருக்கும் தோணேல்ல .

 வீட்டில்ல ஆனா எல்லார்க்கும் அன்னார்ந்து பாக்க வானம் மட்டும் இருந்தது , குனிஞ்சு நிலத்த பாக்க ஒருத்தருக்கும் தைரியம் இல்ல .நிறைய காசு கண்ணுக்கு முன்னால எரிஞ்சு பாத்தனான் இண்டைக்கு காசு மேல அவ்வளவா ஆசை இல்ல. 

ஒருத்தருக்கும் சாப்பாடு இல்ல ஆனா நிறைய சாப்பாடு இண்டைக்கு எரிஞ்சத பாத்தனான்.உயிர் போற நேரத்திலயும் நகைக்கு ஆச பட்டவனையும் பாத்தான் இண்டைக்கு ,உயிருக்கு பயந்து கப்பல்ல திருகோணமலை போனவனையும் பாத்தனான் . இப்ப யாழ்ப்பாணத்தில ஒருத்தரும் வாழாத வாழ்க்கைய 2008 வரைக்கும் நிறையவே அனுபவிச்சாச்சு. 

 2009 க்கு பிறகு இப்பிடியும் ஒரு பக்கம் அனுபவிக்க இருக்கு என்றதயும் அனுபவிச்சாச்சு. எண்ணி என்ன வந்தாலும் பாத்துக்கலாம் என்றதை அனுபவிக்க வச்சு சொல்லி தந்த நாள் இதுதான்.இப்ப எல்லாம் அனுபவிக்கிறவன பாத்தா அட போடா எண்டு சிரிப்பு வருது. இண்டைக்கு எனக்கு நிறைய பசிச்சது ஆனா அம்மாட சாப்பாடு வேணும் எண்டு கேக்க தோணேல்ல. முடிஞ்ச வரைக்கும் அம்மா போட்டுத்தந்த சாப்பாடா கீழ கொட்டினதும் இல்ல. 

 என்னடா இவள் நிறைய சாப்பிடுறாள் எண்டு யோசிச்சவன பாத்தும் ஒண்டும் சொன்னதில்லை, காசிருந்தா சாப்பாடு வாங்கி குடுக்க பழகிட்டன் ஏனென்டா எனக்கு பசி தெரியும் . இண்டைக்கு எல்லாம் நிறைய பதிவுகளை பார்க்க நிறையவே சிரிப்பு வருது. அனுபவிச்சவன விட அழுத்தி சொல்ல ஒருத்தருக்கும் உரிமை இல்ல.

இங்க இருந்திட்டு வெளிநாட்டில போய் தமிழ் எண்டு கத்துறவன பாத்தா கண்ணுக்கு முன்னுக்கு செருப்பு ஞாபகம் வருது எனக்கு .இத எல்லாம் சொல்ல என்ன உரிமை இருக்கெண்டுகேடா கடைசியா சொல்றன் கடைசியா அந்த வாய்க்காலை தாண்டி கால் எடுத்து வைத்த குடும்பம் என்னுடையது.

 -சிந்து -

images/content-image/1684383912.jpg