அமெரிக்க ஜனாதிபதி பங்கேற்காததால் குவாட் உச்சி மாநாடு ரத்து

#Meeting #America #President #Biden
Prasu
3 years ago
அமெரிக்க ஜனாதிபதி பங்கேற்காததால் குவாட் உச்சி மாநாடு ரத்து

இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கும் குவாட் அமைப்பின் உச்சி மாநாடு ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் வருகிற 24-ந்தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

இதில் இந்திய பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா, ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் ஆகியோர் கலந்துகொண்டு பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனது ஆஸ்திரேலிய பயணத்தை ரத்து செய்துள்ளார் என்றும் குவாட் மாநாட்டில் அவர் பங்கேற்க மாட்டார் என்றும் வெள்ளை மாளிகை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

 ஜப்பானில் வருகிற 19-ந்தேதி நடைபெறும் ஜி-7 மாநாட்டில் பங்கேற்கும் ஜோ பைடன், அதன் பின் ஆஸ்திரேலியாவுக்கு செல்லாமல் அமெரிக்காவுக்கு திரும்புவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் நிலவும் கடன் உச்சவரம்பு நெருக்கடி தொடர்பாக முக்கிய ஆலோசனை மேற்கொள்வதற்காக ஜோ பைடன் தனது ஆஸ்திரேலிய பயணத்தை ரத்து செய்துள்ளார். இந்த நிலையில் ஜோ பைடனின் ஆஸ்திரேலிய பயணம் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து குவாட் மாநாட்டை ஆஸ்திரேலியா ரத்து செய்துள்ளது.

 இது தொடர்பாக ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் கூறும்போது, "சிட்னியில் அடுத்த வாரம் நடைபெற இருந்த குவாட் தலைவர்கள் கூட்டம் தொடராது. அதற்கு பதிலாக ஆஸ்திரேலியா, அமெரிக்கா, இந்தியா, ஜப்பான் ஆகிய நாடுகளின் தலைவர்கள் ஜப்பானில் இந்த வார இறுதியில் நடைபெறும் ஜி-7 உச்சி மாநாட்டில் சந்திப்பார்கள்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4