மியன்மாரின் ராக்கைனில் சூறாவளியினால் 41 பேர் பலி!

#world_news #Lanka4 #Tamilnews
Prabha Praneetha
3 years ago
மியன்மாரின் ராக்கைனில் சூறாவளியினால் 41 பேர் பலி!

மியன்மாரின் ராக்கைன் மாநிலத்தில் மோச்சா சூறாவளியினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 41 ஆக அதிகரித்துள்ளது. 

அத்துடன் நூற்றுக்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ளனர். மோச்சா சூறாவளி நேற்றுமுன்தினம் மணித்தியாலத்துக்கு சுமார் 195 கிலோமீற்றர் வேகத்தில் ராக்கைன் கரையைக் கடந்தது.

 இதனால், 'பு மா' எனும் கிராமத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளனர் என உள்ளூர் அதிகாரியான கார்லோ தெரிவித்துள்ளார். 

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும், நூற்றுக்கும் அதிகமானோரை காணவில்லை எனவும் அவர் கூறியுள்ளார். 

 காவுங் தோக் கார் கிராமத்தில் 24 பேர் உயிரிழந்துள்ளனர் என அக்கிராமத் தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4