தேர்தல் குறித்து நடிகர் பிரகாஷ்ராஜ் பகிர்ந்த சுவாரஸ்ய ட்வீட்

#Lanka4 #Tamilnews
Prabha Praneetha
2 years ago
தேர்தல் குறித்து நடிகர் பிரகாஷ்ராஜ் பகிர்ந்த சுவாரஸ்ய ட்வீட்

வெறுப்பையும், மதவெறியையும் விரட்டியடித்த கர்நாடகாவுக்கு நன்றி” என கர்நாடக தேர்தல் முடிவுகள் குறித்து நடிகர் பிரகாஷ்ராஜ் தனது சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

 224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு ஒரே கட்டமாக கடந்த 10ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. 

இதில் பாஜக, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் என மூன்று பெரும் கட்சிகளுக்கிடையே மும்முனை போட்டி நிலவிய நிலையில், மொத்தமாக 2 ஆயிரத்து 615 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட்டனர்.

 இதனையடுத்து, கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க உள்ள நிலையில், கர்நாடக தேர்தல் முடிவுகள் குறித்து நடிகர் பிரகாஷ்ராஜ் தனது சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

அதில், வெறுப்பையும், மதவெறியையும் விரட்டியடித்த கர்நாடகாவுக்கு நன்றி” என பதிவிட்டுள்ளார். மத்திய பாஜக அரசை பிரகாஷ்ராஜ் தொடர்ந்து விமர்சித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!