ஆசிரியரின் பெயரை எழுதிவிட்டு தற்கொலை செய்து கொண்ட மாணவன்: வவுனியாவில் சம்பவம்
#SriLanka
#Vavuniya
#Death
#School Student
Mayoorikka
2 years ago
வவுனியா, ஆச்சிபுரம் பகுதியில் ஆசிரியரின் பெயரை எழுதி விட்டு பாடசாலை மாணவன் ஒருவர் நேற்று (11) தற்கொலை செய்துள்ளார்.
கோவிற்குளம் பகுதியில் உள்ள கல்லூரியில் கல்வி பயிலும் தரம் 10 இல் கல்வி பயிலும் 14 வயதுடைய பாடசாலை மாணவன் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
என் சாவிற்கு காரணம் தனது கல்லூரி ஆசிரியர் என எழுதி வைத்திருந்த கடிதமும் மாணவனின் வீட்டிலிருந்து பொலிஸாரினால் மீட்கப்பட்டதுடன் பிரேத பரிசோதனைக்காக மாணவனின் சடலம் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் மாணவனின் பெற்றோரிடம் விசாரணைகளை முன்னெடுத்திருந்ததுடன் மேலதிக விசாரணைக்காக குறித்த ஆசிரியரிடமும் விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாவும் பொலிஸார் தெரிவித்தனர்.