இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரை சந்தித்த திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினர்!
சவூதி அரேபியாவிற்கும், இலங்கைக்குமான நீண்டகால உறவு குறித்து திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினர் எம் எஸ் தௌபீக் இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவர் காலித் ஹமௌட் நஸீர் அல்டசான் அல்கதானியை சந்தித்து கலந்துரையாடல் மேற்கொண்டார்.
குறித்த சந்திப்பு சவூதி அரேபியத் தூதரகத்தில் வியாழக்கிழமை (11) இடம்பெற்றது. இந்த சந்திப்பில் சவூதி அரேபியாவிற்கும், இலங்கைக்குமான நீண்டகால உறவு குறித்து பாராளுமன்ற உறுப்பினர் எம் எஸ் தௌபீக் நினைவுபடுத்தியதுடன் கடந்த காலங்களில் இலங்கை மக்களுக்கு உதவியதற்காக தனது நன்றிகளையும் தெரிவித்தார்.
அத்துடன் திருகோணமலை மாவட்ட மக்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள், அவர்களின் கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப்பு மற்றும் மீன்பிடி, விவசாயம் என்பன குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது.
இவைகளுக்கு நியாயமான தீர்வுகளைப் பெற்று தருவதற்கு முயற்சிப்பதாகவும். அத்தோடு உரியவர்களுக்கு தங்களது பிரச்சனைகளை முன்வைப்பதாகவும் சவூதி அரேபியத் தூதுவர் இதன்போது தெரிவித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.