கர்நாடகாவில் 144 தடை தொடரும் காங்கிரஸ் பாஜக தொண்டர்கள் மோதல்

#Election #Tamil Nadu #Arrest #Police
Mani
3 years ago
கர்நாடகாவில் 144 தடை தொடரும் காங்கிரஸ் பாஜக தொண்டர்கள் மோதல்

கர்நாடகாவில் சட்டசபைத் தேர்தல் ஒரே கட்டத்தில் நடந்து முடிந்துள்ளது இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை வரும் 13ஆம் தேதி நடைபெற உள்ளது, இதைத் தொடர்ந்து வாக்கு மையங்களுக்கு பாதுகாப்பு கூடுதலாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

  மூடுஷெட்டே உட்பட்ட பகுதிகளில் பாஜக தொண்டர்களுக்கும் மற்றும் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் இடையே மோதல் உருவானது. இதில் சிலர் காயமடைந்துள்ளனர் அவர்களை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.   இந்த சம்பவத்தில் காவல் அதிகாரி ஒருவர் காயமடைந்துள்ளதாக செய்தி பரவி உள்ளது. போலீஸ் வாகனமும் தாக்குதல்களில் சேதம் அடைந்துள்ளது.

 இது குறித்து போலீசார் 5 எஃப் ஐ ஆர் பதிவு செய்துள்ளனர்.  மங்களூர் காவல் நிலைய ஆணையர் குல்தீப் குமார் ஜெயின் கூறுகையில் நகரில் சட்டம் மற்றும் ஒழுங்கை பராமரிக்க 5 காவல் நிலை எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் 144 தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.   இதைத்தொடர்ந்து மோதலில் ஈடுபட்ட 4 பேரை கைது செய்துள்ளோம் என்றும், நீதிமன்ற காவலில் அனுப்பப்பட்டுள்ளனர் மோதலுடன் தொடர்புடையவர்களை அடையாளம் கண்டு வருகிறோம்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4