தியாகி அறக்கட்டளை நிறுவனத்தினால் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு மாதாந்தம் 2 ஆயிரம் ரூபா நிதி!

#SriLanka #Jaffna
Mayoorikka
2 years ago
தியாகி அறக்கட்டளை நிறுவனத்தினால் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு மாதாந்தம்  2 ஆயிரம் ரூபா நிதி!

வறுமைக் கோட்டிற்கு உட்பட்ட முன்பள்ளி ஆசிரியர்களுக்கு மாதாந்தம் இரண்டாயிரம் ரூபா நிதி உதவியை தியாகி அறக்கட்டளை நிறுவுனர் வாமதேவன் தியாகேந்திரன் வழங்கி வைக்கின்றார்.

 இந்த நிகழ்வு இன்றுTCT வணிக வளாகத்தில் தியாகி அறக்கட்டளை நிறுவுனர் வாமதேவன் தியாகேந்திரன் அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

 ஐந்து இலட்சம் ரூபாய் நிதி உதவி இன்று முன்பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளது.இந்த நிதி மாதாந்தம் குறித்த முன்பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் எனவும் வாமதேவன் தியாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண மக்கள் அதிகமாக வழிபாடும் தெய்வமான வைரவருக்கு தன்னுடைய சொந்த காணியில் சொந்த செலவு மிகப்பிரமாண்டமாக கோவில் கட்டியுள்ளார்.குடமுழுக்கு உற்சவமும் வெகு சிறப்பாக நடைபெற உள்ளது. யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற கூற்றுக்கு இணங்க அனைவரும் நல்லாசி பெற வேண்டும் என்ற நல்லெண்ணத்துடன் இந்த ஆலயத்தை அமைத்துள்ளார்.

 கொடைக்கோன் வாமதேவன் தியாகேந்திரன் என்பது குறிப்பிடத்தக்கது. இது மட்டுமல்லாமல் பலருக்கு தனது நிறுவனத்தில் பகுதி நேர வேலைக்கும் உத்தரவாதம் கொடுத்துள்ளார்.பல வறிய பிள்ளைகள் வளர்ச்சிப்பாதைக்கு செல்ல உறுதுணையாக கல்வி உதவி மருத்துவ உதவி என எண்ணிலடங்காத பல உதவிகளை வழங்கி வருகிறார் ஏழைகளுக்கு வைத்திய சாலை நிறுவும் சேவையையும் ஆரம்பித்துள்ளார்.

பணம் கொடுத்து சிகிச்சை பெற முடியாதவர்கள் இதன் மூலம் சேவையை பெற்றுக்கொள்ளும் நோக்கில் இதை அமைத்துள்ளார் என்பது முக்கியமானதாகும். அந்த வகையில் தியாகி அறக்கட்டளை திரு அன்புள்ளம் வாமதேவன் தியாகேந் திரம் அவர்களின் கொடை உள்ளத்தை மனதில் வைத்து அவருக்கு “கொடைக்கோன்” என்ற கௌரவ திரு நாமத்தை LANKA4 ஊடகம் சூட்டி பாராட்டுகிறது.images/content-image/1683728919.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!