பெரு நாட்டில் தங்கசுரங்கத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 27 தொழிலாளர்கள் மரணம்

#Death #Rescue #Blast #Mine
Prasu
3 years ago
பெரு நாட்டில் தங்கசுரங்கத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 27 தொழிலாளர்கள் மரணம்

தென் அமெரிக்கா நாடான பெரு லாஎஸ்பெ ரான்சா மாகாணம் அரேக்யூபா நகரில் தங்க சுரங்கம் இயங்கி வருகிறது. இந்த சுரங்கத்தில் சுமார் 300 அடி ஆழ பள்ளத்தில் நேற்று தொழிலாளர்கள் வேலை பார்த்துக்கொண்டு இருந்தனர்.

அப்போது திடீரென அந்த தங்கசுரங்கத்தில் தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென சுரங்கம் முழுவதும் பரவியது. இதனால் அங்கிருந்து தொழிலாளர்களால் உடனடியாக வெளியே வரமுடியவில்லை. அதற்குள் தீ அவர்களை சூழ்ந்தது. 

விண்ணை முட்டும் அளவுக்கு கடும் புகை மூட்டமும் ஏற்பட்டது. இது பற்றி அறிந்ததும் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். 

பல மணி நேரம் போராடி அவர்கள் தீயை அணைத்தனர். இந்த தீயில் சிக்கி மூச்சு திணறியும், உடல் கருகியும் 27 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே இறந்தனர். உடல் கருகிய நிலையில் 2 பேர் மீட்கப்பட்டனர். அவர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். 

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. சம்பவம் பற்றி அறிந்ததும் பலியான தொழிலாளர்களின் உறவினர்கள் சோகத்துடன் அங்கு திரண்டனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4