மன்னாரில் இலக்கு வைக்கப்படும் மாணவர்கள் ; சம்பந்தப்பட்ட தரப்பினர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளேன் - அரச அதிபர் தெரிவிப்பு

#SriLanka #Governor #students
Kanimoli
2 years ago
மன்னாரில் இலக்கு வைக்கப்படும் மாணவர்கள் ; சம்பந்தப்பட்ட தரப்பினர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளேன் - அரச அதிபர் தெரிவிப்பு

மன்னாரில் சிறுவர்களை இலக்கு வைத்து இனிப்பு பண்டங்களை வழங்கி வாகனத்தில் கடத்தும் முயற்சிகள் தொடர்பில் முறைப்பாடு கிடைத்துள்ளதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டிமெல் தெரிவித்தார்.

 மன்னாரில் சிறுவர்களை இலக்கு வைத்து கடத்தும் நோக்கில் சிலர் மன்னார் மாவட்டத்திற்குள் ஊடுருவி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் அவரிடம் தொடர்பு கொண்டு கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

 இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், மன்னாரில் உள்ள பாடசாலை மாணவர் ஒருவரை வாகனம் ஒன்றில் வந்தவர்கள் இனிப்பு பண்டங்களை வழங்கி குறித்த மாணவரை பலவந்தமாக ஏற்றிச் செல்ல முயற்சி செய்யப்பட்டதாக குறித்த மாணவர் தனது பெற்றோரிடம் தெரிவித்த நிலையில் குறித்த சம்பவம் தெரிய வந்துள்ளது.

 இவ்விடயம் தொடர்பாக குறித்த மாணவன் கல்வி கற்கும் பாடசாலைக்குச் சென்று விசாரணைகளை முன்னெடுக்கும் வகையில் பாடசாலைக்குச் சென்று மாணவனிடம் விசாரணைகளை மேற்கொண்டேன். . இதன் போது மேலும் ஒரு மாணவனை நேற்று திங்கட்கிழமை காலை பாடசாலைக்குச் செல்லும் போது இனிப்பு பண்டங்களை வழங்கி வாகனத்தில் ஏற்ற முற்பட்டதாக தெரிவித்துள்ளார்.

 இச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவ்விடையம் குறித்து மன்னார் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளதோடு, பாடசாலை பகுதிகளில் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளேன்.

 சந்தேகத்திற்கிடமான வாகனங்களின் நடமாட்டம் தெரிந்தால் உடனடியாக பொலிஸாரின் கவனத்திற்கு கொண்டு வாருமாறு பாடசாலை மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் அறிவுறுத்தல் வழங்குமாறு பாடசாலை அதிபருக்கும் வலயக்கல்வி பணிமனைக்கும் அறிவுறுத்தல் வழங்கி உள்ளேன். மேலும் குறித்த விடயம் தொடர்பில் வட மாகாண ஆளுநர் மன்னர் மாவட்ட இராணுவ கட்டட தளபதி ஆகியோருக்கும் தகவல்களை வழங்கி உள்ளதாக அரச அதிபர் மேலும் தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!