நாடளாவிய ரீதியில் இன்று முதல் விசேட பேருந்து சேவையை முன்னெடுக்க நடவடிக்கை

#SriLanka
Kanimoli
2 years ago
நாடளாவிய ரீதியில் இன்று முதல் விசேட பேருந்து சேவையை முன்னெடுக்க நடவடிக்கை

நாடளாவிய ரீதியில் அனைத்து வெசாக் பகுதிகள் மற்றும் விசேட புனித ஸ்தலங்களை உள்ளடக்கும் வகையில் இன்று முதல் விசேட பேருந்து சேவையை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

 வெசாக் வாரத்தில் காலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை இந்த போக்குவரத்து சேவை இயங்கும் என அதன் தலைவர் லலித் டி சில்வா தெரிவித்தார். வெசாக் பண்டிகையை முன்னிட்டு சில சிறப்பு ரயில்களை இயக்கவும் திட்டமிட்டுள்ளதாக ரயில்வே துணைப் பொது மேலாளர் எம்.ஜே. இதிபோலகே குறிப்பிட்டார்.

 வெசாக் பண்டிகையை முன்னிட்டு விகாரைகள், வெசாக் வலயங்கள் உட்பட பல்வேறு சமய நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்களுக்கு விசேட பாதுகாப்பு வேலைத்திட்டமொன்றுக்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!