கனடாவில் குற்றச் செயல்களில் ஈடுபட்ட 7 பொலிஸ் அதிகாரிகள் கைது

#Arrest #Police #Canada #Terrorism Act
Prasu
5 months ago
கனடாவில் குற்றச் செயல்களில் ஈடுபட்ட 7 பொலிஸ் அதிகாரிகள் கைது

கனடாவின் டொராண்டோ பொலிஸ் சேவையில் பணியாற்றிய ஏழு பொலிஸ் உத்தியோகத்தர்கள் திட்டமிட்ட குற்றச் செயல்கள் மற்றும் ஊழல் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யோர்க் பிராந்திய பொலிஸார் முன்னெடுத்த நீண்டகால ரகசிய விசாரணையின் பின்னணியில் இந்த கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

கைது செய்யப்பட்டவர்களில் நால்வர் உடனடியாக சம்பளமின்றி பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் டொராண்டோ பொலிஸின் 11 மற்றும் 12 பிரிவுகள் மற்றும் துப்பாக்கி மற்றும் வன்முறைக் கும்பல் போன்ற முக்கியப் பிரிவுகளில் பணியாற்றியவர்கள் என்பதும் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விசாரணையில் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் உத்தியோகத்தர்களில் இருவரின் அடையாளங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4