இலங்கையின் பெட்ரோலிய சந்தைக்குள் பிரவேசிக்க விருப்பம் சீனா அவுஸ்ரேலியா விருப்பம்

#SriLanka
Kanimoli
2 years ago
இலங்கையின் பெட்ரோலிய சந்தைக்குள் பிரவேசிக்க விருப்பம் சீனா அவுஸ்ரேலியா விருப்பம்

புதிய விநியோகஸ்தர்களுக்கு வழங்கப்படவுள்ள எரிபொருள் நிலையங்களின் உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகத்தின் முதல் இரண்டு குழுக்களுடன் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

 450 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் தலா 150% மூன்றாக பிரிக்கப்பட்டு புதிய வௌிநாட்டு எண்ணெய் விநியோகத்தர்களுக்கு வழங்கப்படவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

 புதிய விநியோகத்தர்களுக்கான சந்தைப்படுத்தல் பிரதிநிதிகளை ஒதுக்குவது, பயன்படுத்தப்படவுள்ள இயந்திரங்களை வகைப்படுத்துவது, புதிய உடன்படிக்கைகள், விலை சூத்திரம், புதிய விநியோகத்தர்களுக்கான நன்மைகள், சந்தைப்படுத்தல் பிரதிநிதிகளுக்கு கிடைக்கும் வருமானம், அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் விதிமுறைகள் தொடர்பாக இதன்போது ஆராயப்பட்டுள்ளது.

 சீனாவின் Sinopec, அமெரிக்காவின் R.M.Parks, அவுஸ்திரேலியாவின் United Petroleum ஆகிய மூன்று நிறுவனங்கள் இலங்கையின் பெட்ரோலிய சந்தைக்குள் பிரவேசிக்க விருப்பம் தெரிவித்துள்ளன. இந்த நிறுவனங்களுக்கு பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருள் விநியோகிக்கும் தலா 150 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் வீதம் 450 எரிபொருள் நிரப்பு நிலையங்களை வழங்கவுள்ளதுடன், புதிதாக தலா 50 எரிபொருள் நிரப்பு நிலையங்களை ஆரம்பிக்கவும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!