ஆளில்லா விமானங்களை அனுப்பிய சம்பவத்தில் அமெரிக்கா மீது ரஷ்யா குற்றச்சாட்டு

ரஷ்யாவின் மாஸ்கோவில் உள்ள அதிபர் மாளிகை மீது நடத்தப்பட்ட ஆளில்லா விமான தாக்குதலுக்கும் அமெரிக்காவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
அதன் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி, ரஷ்யாவின் கிரெம்ளினில் நடந்த ஆளில்லா விமானத் தாக்குதல் தொடர்பாக, அமெரிக்கா மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.
இதில் அமெரிக்காவுக்கு எந்த தொடர்பும் இல்லை என்றும், ரஷ்யா பொய்யான அறிக்கைகளை வெளியிடுகிறது என்றும் அவர் கூறினார்.
இருப்பினும், கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், ஜனாதிபதி விளாடிமிர் புட்டினைக் கொல்ல ஆளில்லா விமானங்களை அனுப்புவது போன்ற தாக்குதல்கள் குறித்து முடிவுகளை எடுப்பது உக்ரைன் அல்ல, அமெரிக்கா என்று குற்றம் சாட்டினார்.
எவ்வாறாயினும், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை படுகொலை செய்ய ட்ரோன்களை அனுப்பிய குற்றச்சாட்டை வன்மையாக நிராகரிப்பதாகவும் உக்ரைன் தெரிவித்துள்ளது.



