பொரளை தனியார் வைத்தியசாலையில் இடம்பெற்ற முறைகேடுகள்: விசாரணைக் குழுவின் பரிந்துரைகள் நீதிமன்றத்திற்கு அறிவிப்பு

#SriLanka #Colombo #Court Order #Hospital #Lanka4 #sri lanka tamil news
Prathees
2 years ago
பொரளை தனியார் வைத்தியசாலையில் இடம்பெற்ற முறைகேடுகள்: விசாரணைக் குழுவின் பரிந்துரைகள் நீதிமன்றத்திற்கு அறிவிப்பு

சிறுநீரக மாற்று சத்திரசிகிச்சை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் நிறைவடையும் வரை பொரளை வெஸ்டர்ன் வைத்தியசாலைக்கு உறுப்பு மாற்று சிகிச்சைக்கான அனுமதியை இடைநிறுத்துமாறு இது தொடர்பில் ஆராய்ந்த விசாரணைக் குழு பரிந்துரைத்துள்ளதாக சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

சிறுநீரக மாற்று சத்திரசிகிச்சையை இடைநிறுத்துமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தமது வைத்தியசாலைக்கு வழங்கிய கடிதத்தை இரத்து செய்யுமாறு கோரி பொரளை வெஸ்டர்ன் வைத்தியசாலையால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது பிரதி சொலிசிட்டர் ஜெனரல் விக்கும் டி ஆப்ரூ பிரதிவாதிகள் சார்பில் ஆஜராகியிருந்தார். 

குறித்த வைத்தியசாலையில் சிறுநீரக மாற்றுச் சத்திரசிகிச்சை தொடர்பில் எழுந்துள்ள குற்றச்சாட்டுக்களை ஆராய்வதற்காக 09 பேர் கொண்ட குழுவொன்றை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் நியமித்துள்ளதாக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் குறிப்பிட்டார்.

இந்த சம்பவங்கள் தொடர்பிலான விசாரணைகள் முடியும் வரை உறுப்பு மாற்று சிகிச்சைக்காக சம்பந்தப்பட்ட வைத்தியசாலைக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதியை இடைநிறுத்துமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு குழு பரிந்துரைத்துள்ளதாக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் மேலும் தெரிவித்தார்.

 எவ்வாறாயினும், உறுப்பு மாற்று சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு வழங்கப்பட்ட அனுமதி டிசம்பர் 31ஆம் திகதியுடன் காலாவதியாகியுள்ளதாக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்தார்.

மனுதாரர் சார்பில் ஆஜரான பைசர் முஸ்தபாஇ சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள உறுப்பு மாற்று சத்திரசிகிச்சைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளமையினால், தமது வாடிக்கையாளர்கள் வைத்தியசாலை ஊழியர்களுக்கு சம்பளம் கூட வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக நீதிமன்றில் தெரிவித்துள்ளார். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் பிரதிநிதியின் மேற்பார்வையில் உரிய உறுப்பு மாற்று சத்திரசிகிச்சைகளை மேற்கொள்வதற்கான அனுமதி தொடர்பில் தமக்கு ஆட்சேபனை இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

முன்வைக்கப்பட்ட உண்மைகளை பரிசீலித்த நீதிமன்றம், மனுக்கள் மீதான விசாரணையை வரும் 11ம் திகதிக்கு ஒத்திவைத்தது.

இந்த மனு மீதான விசாரணையின் போது மனுதாரர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபாவுக்கும் பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் விக்கும் டி ஆப்ரூவுக்கும் இடையில் காரசாரமான வார்த்தைப் பிரயோகம் இடம்பெற்றதாக நெத் நியூஸ் நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!