விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியில் பங்கேற்க பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு தீர்மானம்

#SriLanka
Prathees
2 years ago
விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியில் பங்கேற்க பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு தீர்மானம்

கல்விப் பொதுச் சான்றிதழ் உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியில் பங்கேற்க பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.

அதன் தலைவர் பேராசிரியர் ஷியாம பன்னஹக்க இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு விடைத்தாள் மதிப்பீடு தொடர்பான தனது கடமைகளை இரண்டு வாரங்களுக்குள் முடிக்க முடியும் என தெரிவித்தார்.

எவ்வாறாயினும், தமது பிரச்சினைகளுக்கு தீர்வுகாண தொடர்ந்தும் போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் தலைவர் பேராசிரியர் ஷியாம பன்னஹக்க தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் வரிக் கொள்கைக்கு எதிராக பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

 அதன்படி, உயர்தரப் பரீட்சை விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் நடவடிக்கைகளில் இருந்து இரண்டு மாதங்களுக்கும் மேலாக ஒதுங்கியிருந்தனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!