அதிக விலைக்கு முட்டை விற்பனை: வர்த்தகர்கள் மூவருக்கு மூன்று லட்சம் ருபாய் அபராதம்
#SriLanka
#prices
#Egg
#Lanka4
#sri lanka tamil news
Prathees
2 years ago

கட்டுப்பாட்டு விலைக்கு மேல் முட்டை விற்பனை செய்த மூன்று வர்த்தகர்களுக்கு மூன்று லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா மாவட்ட வாடிக்கையாளர் சேவை அதிகாரசபையின் அதிகாரிகளினால் சம்பந்தப்பட்ட வர்த்தகர்களை நுவரெலியா நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
சந்தேகநபர்கள் தலா ஒரு இலட்சம் ரூபா தண்டப்பணம் செலுத்துமாறு நீதிமன்றில் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளதாக நுவரெலியா நீதவான் சஞ்சிவ நாலக விரசிங்க உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன், கட்டுப்பாட்டு விலைக்கு அப்பால் அரிசி விற்பனை செய்தமை, காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்தமை, விலையை காட்சிப்படுத்தாமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் 16 சந்தேகநபர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதுடன், ஐம்பத்து இரண்டாயிரம் ரூபா தண்டப்பணம் செலுத்துமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.



