சுவிஸ் நாட்டில் வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் மக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

சுவிட்சர்லாந்தில் வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 2021 ஆம் ஆண்டு வறுமை கோட்டின் கீழ் வாழ்வோரின் எண்ணிக்கை 8.7 விதமாக பதிவாகி உள்ளது.
கடந்த 2020 ஆம் ஆண்டு வறுமைக்கோட்டின் கீழ் வாழும் சனத்தொகையின் அளவு 8.5 வீதமாக பதிவாகியுள்ளது.
இதன்படி நாட்டின் மொத்த ஜனத்தொகையில் சுமார் 745000 மக்கள் குறைந்த வருமானத்தை ஈட்டுவதாக அதாவது வறுமை கோட்டின் கீழ் வாழ்வதாக தெரிவிக்கப்படுகிறது.
தனிநபர்கள் சராசரியாக 2289 சுவிஸ் பிராங்குகளுக்கு அதிகமாக மாத வருமானம் ஈட்டவில்லை என்றால் அவர்கள் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்பவர்கள் என அர்த்தப்படுகின்றது.
வெளிநாட்டவர்கள் தனியாக வாழும் பெற்றோர் உள்ளிட்ட தரப்பினர் அதிக அளவில் வறுமையினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பணிகளில் ஈடுபட்டாலும் வறுமை கோட்டின் கீழ் வாழும் நபர்களின் எண்ணிக்கை 157000 என தெரிவிக்கப்படுகிறது.



