புட்டினை குறிவைத்து ரஷ்யாவின் தலைநகர் மீது தாக்குதல் நடத்திய உக்ரைன்

#world_news #Attack #Russia #Ukraine #War #Lanka4
Prathees
2 years ago
புட்டினை குறிவைத்து ரஷ்யாவின் தலைநகர் மீது தாக்குதல் நடத்திய உக்ரைன்

ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் மீதான கொலை முயற்சியை வெற்றிகரமாக முறியடித்ததாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

உக்ரைன், ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை கொல்ல முயற்சிப்பதாக ரஷ்யா குற்றம் சாட்டியது.

அதன்படிஇ ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள கிரெம்ளினில் தாக்குதல் நடத்த இரண்டு ஆளில்லா விமானங்கள் வந்துள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இவ்வாறு வந்த ட்ரோன்களை வெற்றிகரமாக தாக்கியதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. கிரெம்ளின் ரஷ்யாவின் ஜனாதிபதி இல்லமாகும்.

தாக்குதல் நடத்துவதற்கு ஆளில்லா விமானங்கள் வரும் போது, ​​கிரெம்ளினில் அதிபர் விளாடிமிர் புடின் இருந்தாரா இல்லையா என்பதை ரஷ்யா இன்னும் அறிவிக்கவில்லை என சில வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எனினும் ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் பாதுகாப்பாக இருப்பதாக கிரெம்ளின் தெரிவித்துள்ளது. அவரது அன்றாட நடவடிக்கைகள் திட்டமிட்டபடி தொடரும் என கிரெம்ளின் அறிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!