ரயிலுடன் முச்சக்கர வண்டி மோதி இருவர் பலி: தாயும் மூன்று குழந்தைகளும் வைத்தியசாலையில்
#SriLanka
#Death
#Accident
#Lanka4
#Train
#Tamilnews
#sri lanka tamil news
Prathees
2 years ago

வெலிகம, பெலியான பிரதேசத்தில் பாதுகாப்பற்ற புகையிரத கடவையில் இன்று பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவர் உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர்.
மாத்தறையில் இருந்து கண்டி நோக்கி பயணித்த புகையிரதத்துடன் முச்சக்கர வண்டி மோதியதில் இந்த விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் காயமடைந்த மேலும் மூன்று குழந்தைகளும் அவர்களின் தாயும் சிகிச்சைக்காக மாத்தறை பொது வைத்தியசாலை மற்றும் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முச்சக்கரவண்டியை ஓட்டிச் சென்ற 24 வயதுடைய ஒருவரும், 09 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவரும் விபத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும்தெரிவித்தனர்.



