லண்டன் வோல்தம்ஸ்ரோ கற்பக விநாயகர் ஆலய உதவியுடன் ஈழத்தில் விளையாட்டுப்போட்டி

#SriLanka #Temple #London
Soruban
2 years ago
லண்டன் வோல்தம்ஸ்ரோ கற்பக விநாயகர் ஆலய உதவியுடன் ஈழத்தில் விளையாட்டுப்போட்டி

பிரித்தானியாவில் பிரசித்தி பெற்ற தலங்களில் ஒன்றாக விளங்கி வரும் லண்டன் வோல்தம்ஸ்ரோ கற்பக விநாயகர் ஆலயத்தின் நிர்வாகத்தினரால் பல உதவிகள் ஈழத்தில் வழங்கப்பட்டு வருகின்றன. 

இதன் தொடர்ச்சியாக ஆலய நிர்வாகத்தின் உதவியுடன் முல்லைத்தீவு நெடுங்கேணி மாமடுச்சந்தியில் ஒரு அற நெறிப்பாடசாலை நடபெற்று வருகின்றது.

சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு நடாத்தப்பட்ட கலாச்சார விளையாட்டுப் போட்டி கற்பக விநாயகர் ஆலயத்தின் நிதியுதவியுடன் 01-05-2023 சிறப்பாக நடைபெற்றது. 

 இந் நிகழ்வில் லண்டன் வோல்தம்ஸ்ரோ அருள்மிகு ஸ்ரீ கற்பகவிநாயகர் ஆலயத் தலைவர் திரு.கோபாலகிருஷ்ணன் ஐயா அவர்கள் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு சிறப்பித்துள்ளார். 

 இவ் விளையாட்டு விழா சிறப்பாக நடாத்துவதற்கு நிதியுதவியினை வழங்கியுள்ள கற்பக விநாயகர் ஆலயத்தினருக்கு நெடுங்கேணி மக்கள் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொண்டுள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!