பேருந்துக் கட்டணங்கள் மற்றும் உணவுப் பொருட்களின் விலைகளை குறைக்குமாறு கோரிக்கை

மூலப்பொருட்களின் விலை குறைந்தாலும், உரிய நேரத்தில், நியாயமான முறையில் மக்களுக்கு இன்னும் பலன்கள் கிடைக்கவில்லை என்று நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பு தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது.
விலை குறைக்கப்பட்டதன் பயனை நுகர்வோருக்கு வழங்குவதற்கு பொறுப்பான தரப்பினர் விரைந்து தலையிட வேண்டுமென அதன் தலைவர் ரஞ்சித் விதானகே தெரிவித்துள்ளார்.
அண்மைய எரிபொருள் விலை குறைப்புக்கு அமைய பஸ் கட்டணங்கள் குறைக்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீண்டும் எரிவாயு விலை குறைக்கப்படவுள்ளதாகவும், இதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு நன்மைகளை வழங்க ஹோட்டல் உரிமையாளர்கள் செயற்பட வேண்டுமென நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பு தேசிய இயக்கத்தின் தலைவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, 12.5 கிலோ எரிவாயு சிலிண்டரின் விலை இன்று நள்ளிரவு முதல் 100 ரூபாவினால் குறைக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் நேற்று அறிவித்தது. எரிவாயு விலை எப்படி குறைக்கப்படும் என்பது குறித்த நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியிடப்பட உள்ளது.



