இலங்கையில் மத சுதந்திரம் தடைப்பட்டுள்ளது - சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணைக்குழு

#SriLanka
Kanimoli
2 years ago
இலங்கையில் மத சுதந்திரம் தடைப்பட்டுள்ளது - சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணைக்குழு

இலங்கையில் மத சுதந்திரம் தடைப்பட்டுள்ளதாக சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 2023ஆம் ஆண்டு தொடர்பான அறிக்கையை வெளியிடும் ஆணைக்குழு, அந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் கவனம் செலுத்தப்பட வேண்டுமென சுட்டிக்காட்டியுள்ளது.

 இலங்கைக்கு மேலதிகமாக ஆப்கானிஸ்தான், சீனா, நைஜீரியா மற்றும் நிகரகுஆவா ஆகிய நாடுகளில் மத சுதந்திரம் தடைப்பட்டுள்ளதாகவும் அது தொடர்பான அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 குறிப்பாக இலங்கையில் இந்துக்கள் மற்றும் முஸ்லிம்களின் மத சுதந்திரம் மீறப்பட்டுள்ளதாக சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணைக்குழு தெரிவித்துள்ளது. சில மதத் தலைவர்களும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்று அவர்கள் தங்கள் அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!