சீருடையுடன் நடனமாடிய கான்ஸ்டபிள் பணி இடைநிறுத்தம்!
#SriLanka
#Police
#Tamilnews
Prabha Praneetha
2 years ago

இசை நிகழ்ச்சியின் மேடையில் சீருடையில் நடனமாடியதாக கூறப்படும் காவல்துறை கான்ஸ்டபிள் ஒருவரை பணி இடைநிறுத்தம் செய்ய நேற்று காவல்துறை தலைமையகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
பேலியகொட காவல்நிலையத்தில் கடமையாற்றும் காவல்துறை கான்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு பணி இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
களனி - பியகமவிலுள்ள விளையாட்டரங்கொன்றில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியின் போதே இந்த காவல்துறை கான்ஸ்டபிள் மேடையில் ஏறி பாடகர் ஒருவரின் பாடலுக்கு நடனமாடியதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.



