செப்டெம்பர் மாதம் வரை நிலக்கரிக்கு பற்றாக்குறை இல்லை - இலங்கை நிலக்கரி நிறுவனம் தகவல்

#SriLanka #Lanka4 #Tamilnews
Prabha Praneetha
2 years ago
செப்டெம்பர் மாதம் வரை நிலக்கரிக்கு பற்றாக்குறை இல்லை - இலங்கை நிலக்கரி நிறுவனம் தகவல்

நாட்டில் வரும் செப்டெம்பர் மாதம் வரை மின்சார உற்பத்திக்கு தேவையான நிலக்கரி, உள்ளதாக இலங்கை நிலக்கரி நிறுவனம் தெரிவித்துள்ளது.

 நிலக்கரி கட்டளை தற்போது நிறுத்தப்பட்டுள்ளதாக அந்த நிறுவனத்தின் தலைவர் ஹேஷான் சுமனசேகர தெரிவித்தார்.

 எதிர்வரும் செப்டம்பர் மாதம் வரையிலான மின் உற்பத்திக்குத் தேவையான நிலக்கரி, 30 கப்பல்கள் ஊடாக நாட்டுக்கு கொண்டு வரப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

 இதுவரையில் 29 கப்பல்கள் புத்தளத்தை அடைந்துள்ளன. நிலக்கரி அடங்கிய 30 ஆவது கப்பல் நாளை அல்லது நாளை மறுதினம் நாட்டை வந்தடையும் எனவும் இலங்கை நிலக்கரி நிறுவனத்தின் தலைவர் ஹேஷான் சுமனசேகர தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!