வவுனியாவில் சமய வழிபாடுகளில் ஈடுபட்ட இளைஞன் மின்சாரம் தாக்கி மரணம்
#SriLanka
#Vavuniya
#Death
#Police
#Investigation
#Lanka4
#sri lanka tamil news
Prathees
2 years ago
வவுனியா மாரண்டன்குளம் பகுதியில் உள்ள இந்து ஆலயமொன்றில் சமய வழிபாடுகளில் ஈடுபட்ட இளைஞர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மாரண்டன்குளம் பகுதியில் உள்ள இந்து ஆலயத்தில் வருடாந்த ஆராதனையில் ஈடுபட்டிருந்த இளைஞன் ஆலய நுழைவாயிலில் மின்சார வயர் தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
திரண்டிருந்த மக்கள் மின்சாரம் தாக்கியதையடுத்து மின்சாரத்தை துண்டிக்க நடவடிக்கை எடுத்த போதிலும் மின்சாரம் தாக்கியதில் குறித்த இளைஞன் ஏற்கனவே உயிரிழந்துள்ளார்.
மின்சாரம் தாக்கியதில் மாரண்டன்குளம் பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய என். கபிலன் என்ற நபரே உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளை மேற்கொண்டு வரும் வவுனியா பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.