மட்டக்களப்பில் இடம்பெற்ற தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தொழிலாளர் தினம்

சர்வதேச தொழிலாளர் தினத்தினை முன்னிட்டு தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தொழிலாளர் தினம் நேற்று களுதாவளை மைதானத்தில் இடம்பெற்றது.
க்கட்சியின் தொழிற்சங்க செயலாளர் தியாகராஜா தலைமையில், கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும், மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தனின் பங்குபற்றுதலுடன் மாபெரும் பேரணியும் மட்டக்களப்பில் இடம்பெற்றது.
நேற்று பிற்பகல் 2.30 மணிக்கு ஆரம்பமாகிய பேரணிஇ மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதி ஊடாக மட்டக்களப்பு களுதாவளை பொது விளையாட்டு மைதானம் வரை பயணித்தது.
சர்வதேச தொழிலாளர் தினத்தினை முன்னிட்டு இடம்பெற்ற மக்கள் பேரணியில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன், பொதுச் செயலாளர் பூபாலப்பிள்ளை பிரசாந்தன் தொழிற்சங்கத்தின் செயலாளர் தியாகராஜ உட்பட கட்சியின் ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.
தொழிலாளர்களை மையப்படுத்திய அவர்கள் செய்யும் தொழில்களும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. பெருந்திரளான மக்கள் இதில் கலந்து கொண்டனர்.



