யாழ்ப்பாணத்தில் மோட்டார் சைக்கிளும் வேனும் நேருக்கு நேர் மோதி விபத்து: இரு பெண்கள் பலி

யாழ்ப்பாணம் கைடிஸ் வீதியில் அல்லைப்பிட்டி பகுதியில் மோட்டார் சைக்கிளும் வேனும் நேருக்கு நேர் மோதியதில் இரு பெண்கள் உயிரிழந்துள்ளதுடன் இருவர் படுகாயமடைந்துள்ளதாக யாழ்.பொலிசார் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணத்தில் இருந்து ஊர்காவற்துறை நோக்கி பயணித்த வேனும், ஊர்காவற்துறையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும் விபத்துக்குள்ளாகியுள்ளதுடன், மோட்டார் சைக்கிளில் பெண்கள் இருவர் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண்கள் இருவரும் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், மோட்டார் சைக்கிள் மீது மோதி வேன் சாரதி கவிழ்ந்ததில் மேலும் ஒருவர் படுகாயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்தில் உயிரிழந்த இரு பெண்களின் அடையாளம் இதுவரை வெளியாகவில்லை எனவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
விபத்துக்கான சரியான காரணம் இதுவரை தெரியவரவில்லை, அதிக வேகம் காரணமாக வேன் அல்லது மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும், விபத்து தொடர்பில் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் யாழ்ப்பாண பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.



