வெளிநாட்டு முதலீடுகளுக்கு தற்போது பல சலுகைகள்! பிரதமர்

#SriLanka #PrimeMinister #SaudiArabia
Mayoorikka
2 years ago
வெளிநாட்டு முதலீடுகளுக்கு தற்போது பல சலுகைகள்! பிரதமர்

வர்த்தகம், சுற்றுலா மற்றும் முதலீட்டை மேம்படுத்துவதற்காக அரபு இலங்கை வர்த்தக சபையை நிறுவுவதற்கு அரபு தூதுவர்கள் மன்றத்துடன் இணைந்து எகிப்து செயற்பட்டு வருவதாக எகிப்து அரபுக் குடியரசின் தூதுவர் மஜெட் மொஸ்லி தெரிவித்தார்.

 இலங்கைக்கான எகிப்து அரபுக் குடியரசின் தூதுவர் மஜெட் மொஸ்லி, பிரதமர் தினேஷ் குணவர்தனவை பாராளுமன்றத்தின் பிரதமர் அலுவலகத்தில் வைத்து சந்தித்தார்.

 இந்த சபையை அமைப்பது தொடர்பாக அதிகாரிகள் மற்றும் வர்த்தக சபைகளுடன் கலந்தாலோசித்து பூர்வாங்க பணிகள் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 வெளிநாட்டு முதலீடுகளுக்கு தற்போது பல சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதாக பிரதமர் இதன்போது குறிப்பிட்டார்.

 நாட்டின் ஏற்றுமதி கைத்தொழில் வலயங்களில் கைத்தொழில்களை அமைப்பதற்கான முதலீட்டு வாய்ப்புகளை ஆராயுமாறு தூதுவரிடம் குறிப்பாகக் கோரிய பிரதமர், பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து தூதுவரிடம் தெரிவித்தார்.

 குறுகிய காலத்தில் பொருளாதாரத்தை மீட்டெடுக்க அரசாங்கம் மேற்கொண்ட துரித நடவடிக்கைகள் குறித்து எகிப்த்து தூதுவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.

 பொருளாதார நெருக்கடிகளை எதிர்நோக்கும் ஏனைய நாடுகளுக்கு இலங்கை ஒரு பெறுமதியான எடுத்துக்காட்டாக விளங்குவதாகவும் அவர் வலியுறுத்தினார். இந்த நிகழ்வில் பிரதமரின் மேலதிக செயலாளர் ஹர்ஷ விஜேவர்தனவும் கலந்துகொண்டார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!