சூடானில் இருந்து மேலும் சில இலங்கையர் குழு மீட்பு!
#SriLanka
#War
#Sudan
#South Sudan
#saudi
#SaudiArabia
Mayoorikka
2 years ago

சூடானில் இடம்பெற்று வரும் மோதல்கள் காரணமாக அங்கு சிக்கியிருந்த மற்றுமொரு இலங்கையர்கள் குழு பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக சவூதி அரேபியாவிலுள்ள இலங்கை தூதரகம் அறிவித்துள்ளது.
சவுதி அரேபிய அரசாங்கத்தின் ஆதரவுடன் மேற்கொள்ளப்பட்ட மனிதாபிமான நடவடிக்கையின் போது சூடானில் தங்கியிருந்த 11 இலங்கையர்கள் கப்பல் மூலம் ஜித்தா துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
சூடானில் இடம்பெற்ற மோதல்களால் அங்கு சிக்கியுள்ள இலங்கையர்களை விடுவிக்க சவூதி அரேபிய அரசாங்கத்தின் ஆதரவை இலங்கை பெற்றது, அதன்படி அங்கிருந்து விடுவிக்கப்படும் மூன்றாவது இலங்கையர் குழு இதுவாகும்.
இதற்கு முன்னர் இரண்டு தடவைகள் சவூதி அரசாங்கத்தின் ஆதரவுடன் சூடானில் இருந்து 19 இலங்கையர்கள் மீட்கப்பட்டனர்.



