முல்லைத்தீவில் புத்தர் சிலை உடைப்பு தொடர்பில் ஒருவர் கைது!

#SriLanka #Arrest #Police #Buddha #Mullaitivu
Mayoorikka
2 years ago
முல்லைத்தீவில் புத்தர் சிலை உடைப்பு தொடர்பில் ஒருவர் கைது!

முல்லைத்தீவில் பௌத்த சிலை ஒன்றினை சேதப்படுத்திய சந்தேகத்தில் ஒருவரை கொக்கிளாய் பொலிஸார் நேற்று(1) கைதுசெய்துள்ளனர்.

 கொக்குளாய் மேற்கு கிராம அலுவலகர் பிரிவில் உள்ள முகத்துவாரம் பகுதியில் பெரும்பான்மை மக்களால் வணங்கப்பட்டு வந்த புத்தர் கோவில் ஒன்றில் இருந்த புத்தர் சிலை ஒன்று உடைக்கப்பட்டுள்ளதாக கொக்குளாய் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய அங்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.

 1.5அடி உயரம் கொண்ட புத்தர் சிலை உடைக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் நீர்கொழும்பு உடப்பு பகுதியினை சேர்ந்த 33 அகவையுடைய ஒருவர் கொக்குளாய் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

 இவர் மீன்பிடி தொழிலுக்காக கொக்குளாய் முகத்துவாரம் பகுதியில் வந்திருந்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. மேலதிக விசாரணையினை கொக்குளாய் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!